ஐபிஎல் 2025 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, அணியின் நிலையை திருப்பிக்கொள்ளும் நோக்கில் இரண்டு இளம் வீரர்களை சேர்த்துள்ளது.
முன்னதாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது ஆயுஸ் மாத்ரேவை சேர்த்த CSK, தற்போது காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் 21 வயது அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸை அணியில் இணைத்துள்ளது.
அசுர பவர் கொண்ட ஹார்ட்ஹிட்டரான பிரெவிஸ், 81 டி20 போட்டிகளில் 1787 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 145) மற்றும் 123 சிக்சர்கள் உடன் இளம் வயதிலேயே கவனம் ஈர்த்துள்ளார். இவரை முன்னாள் சூப்பர் ஸ்டார் ஏபிடி வில்லியர்ஸ்-இன் வாரிசு எனவும் சிலர் கருதுகிறார்கள்.
வெறும் 7 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், 6 வெற்றிகள் தேவைப்படும் CSK, புதிய வீரர்கள் மூலம் ஒரு பவர் பேக்டு அணியாக மீண்டும் பாய முயல்கிறது. தோனி மீண்டும் கேப்டனாக இணைந்ததும், இது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது.