மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,சமூகநலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்; நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சுதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.59.04 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சமூக நலத்துறை சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.4.87 லட்சம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, நகராட்சி தலைவர் செல்வராஜ், மாவட்ட சமூகநலன் அலுவலர்(பொ) பிரபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்

Exit mobile version