சீர்காழி பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து கடையில் மதுபானம் விற்பனை. தொடர்ந்து புகார் 5 கிராம மக்கள் பெண்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து கடையில் மதுபானம் விற்பனை. தொடர்ந்து புகார் தெரிவிக்கும் நடவடிக்கை இல்லாததால்,ஐந்து கிராம மக்கள் பெண்கள் சாலை மறியல்.

சீர்காழி அருகே பணங்காட்டங்குடி செல்லும் சாலையில் ஊமை மதகு பேருந்து நிலையம் அமைந்துள்ளதுஇந்த பேருந்து நிலையத்திலிருந்து அரூர் ஆலஞ்சேரி ஏலக்குடி உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மாணவ மாணவிகள் பேருந்துக்காக பயன்படுத்துகின்றனர். இதன் அருகில் உள்ள கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து மது வானிலை விற்பதும் மது அருந்துபவர்கள் பயன்படுத்துவதுமாக இருந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.
இதனை கண்டித்து
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர், ஆலஞ்சேரி, ஏனாக்குடி மன்னங்கோயில், தத்தங்குடி, ஐவேலி ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு ஜெயக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்று கண்டனம் உரையாற்றினார். அப்போது அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து கடையில் தொடர்ந்து சட்ட விரோதமாக கள்ள மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை பலமுறை தடுத்து நிறுத்த கோரி வலியுறுத்தியும் தொடர்ந்து மது விற்பனை எந்நேரமும் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.

பேருந்து நிறுத்தத்திலேயே மது விற்பனை செய்யப்படுவதால் 5 கிராம மாணவ மாணவிகள் பெண்கள் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும் குற்றம் சாட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, தாசில்தார் அருள்ஜோதி மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதியில் மதுபான விற்பனை தடுக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் 10 தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Exit mobile version