தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் போது, பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நிலையிலே சில இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் பணியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், வாக்காளர்கள் எளிதாக தேவையான உதவிகளைப் பெறும் வகையில், சென்னை மாநகராட்சி ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்குமான மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தலைமையிலான வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது தொகுதிக்கான உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தொடர்புடைய சேவைகள் குறித்து ஆலோசனை அல்லது உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கான உதவி மைய எண்கள் வருமாறு:
ஆர்.கே.நகர் – 9445190204, 8072155700
பெரம்பூர் – 9445190204, 8015959489
கொளத்தூர் – 9445190206, 7812811462
வில்லிவாக்கம் – 9445190208, 7845960946
திரு.வி.க.நகர் – 9445190206, 9791755291
எழும்பூர் – 9445190205, 9941634048
ராயபுரம் – 9445190205, 7867070540
துறைமுகம் – 9445190205, 8778381704
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – 9445190209, 9884759592
ஆயிரம்விளக்கு – 9445190209, 9626150261
அண்ணாநகர் – 9445190208, 8680973846
விருகம்பாக்கம் – 9445190210, 7358275141
சைதாப்பேட்டை – 9445190213, 7358032562
தியாகராயநகர் – 9445190210, 7418556441
மயிலாப்பூர் – 9445190209, 9789895378
வேளச்சேரி – 9445190213, 9499932846
மதுரவாயல் – 9445190091
அம்பத்தூர் – 9445190207
மாதவரம் – 9003595898
திருவொற்றியூர் – 9445190201
சோழிங்கநல்லூர் – 9445190214, 9445190215
ஆலந்தூர் – 9445190212


















