மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது, சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் மீனாட்சி அம்மன் கோயிலை விட பழமையானது என நம்பப்படுகிறது. அதாவது 2500 ஆண்டுகள் பழமையானது.
செல்வத்தின் அதிபதியான குபேரர், தன் செல்வம் மேன்மேலும் பெருக இங்கு சொக்கநாதரை வழிபட்டு, பிரதிஷ்டை செய்த லிங்கம் தான் இங்குள்ள ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது காலகாலமாக இருக்கும் நம்பிக்கை.
இந்த கோயிலுக்கு ஆதிசொக்கநாதர், பழைய சொக்கநாதர், வடதிருவாலவாய் கோயில் என்ற பெயர்களும் உண்டு. மதுரையில் உள்ள பஞ்சபூதத் தலங்களில் ஆகாய ஸ்தலம் இந்த சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்.

நவகிரகங்களில் புதன் பகவான், இந்த சொக்கநாதரை வழிபட்டதால், இந்த ஆலயம் புதன் தோஷம் நீங்க வழிபட வேண்டிய வேண்டிய புதன் ஷேத்திரமாகும்.
கல்வியில் சிறந்தவராகக் கருதப்படக்கூடிய குசேல பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து வந்தார். தமிழ் சங்கத்தின் புலவராக இருந்த கபிலரின்
நண்பர் இடைக்காட்டூர், பாண்டியனின் அரண்மனைக்குச் சென்று தான் கொண்டு வந்த பாடலை மன்னரிடம் புகழந்து பாடினார்.
இடைக்காட்டூரின் பாடலைக் கேட்டு பாண்டிய மன்னன் பொறாமை கொண்டான். அதனால் அவனை சரியாக உபசரிக்காமல் இருந்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடர் மன்னன் பொறாமையால் தன்னை அவமதித்துவிட்டதாக, சிவனிடம் கூறி தன் வருத்தத்தை தெரிவித்தார்.
உடனே தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோயிலில்
எழுந்தருளியதுடன், இடைக்காட்டூருக்கும் காட்சி கொடுத்து மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார். திருப்பள்ளி எழுச்சி நேரத்தில் இறைவனை வழிபட வந்த பக்தர்கள், அங்கு சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே விஷயத்தை மன்னனிடம் கூற, மன்னனும் கோயிலுக்கு வந்து சிவபெருமானை மனமுருகி வேண்டினார். நெகிழ்ந்து போன இறைவன், தான் இருக்கும் லிங்கங்களிலேயே என் தோழன் குபேரன் பூஜித்த இந்த அற்புத லிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும். இன்று முதல் இந்த தலம் உத்தர வாலவாய் என்று அழைக்கப்படும் என கூறி அருள்பாலித்து மறைந்தார்.
இந்த ஆலயத்தில் மீனாட்சி, சொக்கநாதர், விநாயகர்,நடராஜர், நவகிரக சன்னதி, இடைக்காட்டூர் சித்தர் உள்ளிட்டோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் இறைவனை வழிபட்டு வர திருமணத் தடை நீங்குதல், குழைந்தைபேறு கிடைக்கும், வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
இதனால் இந்த ஆலயம் எப்போதும் பக்தர்களால் நிரம்பியிருக்கும். இம்மையில் நன்மை தருவார் கோயில் ‘நில ஸ்தலம் இத்தலத்தை பற்றி அடுத்த பாகத்தில் காணலாம்.