சிவன் மலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்னுமிடத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.

ஐசதன்ய சொரூபமாக இன்னும் சயல வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும் உட்பிரகாரத்தில் குகையில் சிவ வாக்கியர் அமர்ந்த நிலையில் வள்ளியோடு சுப்பரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பு. திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பது, சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் நிகர் இந்த தலத்தில் நன்மை கிடைக்கும்.

இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாகவும், அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று முயன்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் பல திருப்பணிகள் செய்துள்ளார்.

அது முதல் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம். சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்தில் பாட்டாலி வெண்ணீஸ்வரர் திருக்கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேரே தோன்றியதாகவும், 7 ஸ்வரங்கள் இசைக்கும் தூ ண் அற்புதமான சிற்பங்கள் 13 கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

திரிபுர சுயம்வரத்தின் போது சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து மேருமலையை வில்லாக வளைத்த போது மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேய நாட்டில் விழுந்தது சிவமலை குன்றாக உருவானது. 10 மற்றும் 12ம் நூற்றாண்டிலேயே இந்த கோயில் பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 496 படிகள் ஏறிச் சென்றால் ராஜகோபுரம் தீபஸ்தம்பம், கொடிமரம் முன் மண்டபம் சுற்று பிரகாரம் மூலவர் என்ற அமைப்பில் உள்ள முழுவதும் கற்களால் கட்டப்பட்ட மண்டபம். வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர்.

ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாயநாதர் தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும் தணடபாணி சன்னனி, கொடிமரம் பலிபீடம், சுமூகர், சுதேகர் என்ற துவாரக பாலகர்கள் மலையை சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் 8 அம்மன்கள் எழுந்தருளியுள்ளார்கள். இதில் 18ம் படிக்கு சத்தியபடி என்ற பெயர் உள்ளது. காரண மூர்த்தியான சுப்ரமணியர் சன்னதியில் காரண ஆகம விதிப்படி நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

இங்கு சனிபகவான் கிழக்கு பார்த்து அமைந்திருக்கிறார். மீதமுள்ள 8 கிரகங்கள் சூரியனை பார்த்து. அமர்ந்து இருக்கிறார்கள். கோள்கள் வரிசைப்படி இங்கு நவகிரங்கள் அமைந்துள்ளது. நவகிரகங்களை தனித்தனியே சென்று வழிபடுவதன் பலன் இங்கு ஒரே தலத்தில் கிடைக்கும்.

அனுமதீர்த்தம், அகத்திய தீர்த்தம் இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம், ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடைசெய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பை அறிந்து கங்கை செல்வ வேண்டியுள்ளார்.

முருகன் அவருக்கு காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி காசியை காட்டியதாகவும், இன்று நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மூலவரான சுப்பிரமணியருக்கே நடக்கிறது. இதற்கு இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே முருகனை வழிபடுவதாக ஐதீகம். கருவறையில் மூலவராக வள்ளியம்மை உடனுறை ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி வள்ளி மணாளன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து அறச்சாலை அமைத்து பணி புரிந்தாகவும், வள்ளியறச்சாலை மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேயம் நாட்டில் ஒரு பகுதி வள்யறச்சாலையாக இருந்துள்ளது. தெய்வானை சமேத சுப்ரமணியர் திருமண கோலமுதம், வள்ளி தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளன.

அனைத்து நோய்களும் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உளள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும் சித்தர்கள் பலர் தவமிருந்த மலை இன்னும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

சிவன்மலை கோயில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரண மூர்த்தி என்ற ழேயர் உள்ளது. முன்னமே ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சுpவன்மலை ஆண்டவர் பக்தர்களில் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்கள் உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.

பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால் மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமிடம் அர்ச்சகர்கள் பூ கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்ய செய்யப்பட்ட பொழுது சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது மொபட் பைக் என வாகனங்கள் பெருக்கம். ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது கெட்டது நடந்து வருகிறது.

மேலும், அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில்
உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version