மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா. ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் சிவன் சன்னதி பிரகாரத்தில் வடக்கு நோக்கி சனீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி உள்ள சனீஸ்வரனை வணங்கினால் வாழ்வில் செல்வமும் அதிர்ஷ்டமும் பொங்கும், சனீஸ்வரனின் பார்வை நேர்மறையான சக்திகளை அளித்து தொழில் மற்றும் ஆயுளை விரித்து செய்யும். அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி காலங்களில் ஏற்படும் இன்னல்களை குறைத்து காப்பவராக விளங்கும் சனீஸ்வரனின்
சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், பஞ்சகவ்ய பூஜை, பஞ்சாமிர்த பூஜை, பஞ்சாவர்ண பூஜை, பரிகார சிறப்பு யாகம் மற்றும் பூரணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பரிகார பாலபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்று காலை 8.24 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version