நாமக்கல் நகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அதில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலாவிற்கு வந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி ஆகாஷ்ஜோஷி தலைமையிலான போலீசார் நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மசாஜ் செண்டர்களில் பாலியல் தொழில் நடைபெற்றது உறுதியானது. அதன் அடிப்படையில் மசாஜ் சென்டரில் இருந்த மேலாளர்களாக பணியாற்றி வந்த தமிழ்செல்வன், ஆனந்தி என 2 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மசாஜ் சென்டர்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.