திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
திருவாரூர் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் – சித்ரா தம்பதியினர் அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் இவர்களுக்கு இன்று திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது குடும்பத்தினருடன் சென்று காரில் திரும்பி வந்த போது செல்வத்தின் மகன் புலிபாலன் காரை ஓட்டி வந்துள்ளார். திருவாரூர் அருகே எட்டியலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து குடவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
