போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் பரபரப்பு தீர்ப்பு.
3,1/2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு, இயற்கை வாழ்நாள் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட வஸ்தாராஜபுரம், காலணி தெரு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (27) என்பவர் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை கடந்த 15.10.2023 அன்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தில், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, இன்று திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 27வயது ராமதாஸ் என்பவருக்கு, இயற்கை வாழ்நாள் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், 10000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
திருவாரூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக பாலியல் வழக்கு குற்றவாளிக்கு, இயற்கை வாழ்நாள் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
