முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சரும்.. கழக அமைப்புச் செயலாளரும்.. திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளருமான நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்.. ஆர். காமராஜ் தலைமையில் அதிமுகவினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம்.. சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பாக மனு அளித்தனர்.. தொடர்ந்து.. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்பொழுது .." SIR என்பது அனைவரையும் வாக்காளர்கள் ஆக்குவது என்பதுதான் நோக்கம்.. பட்டியலில் திருத்தம் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது... இறந்தவர்கள் பட்டியல் எடுக்காமல் அப்படியே உள்ளது.. நாங்கள் பலமுறை இறந்தவர்களை பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும்.. என்று மனு கொடுத்துள்ளோம்..
செங்கோட்டையன் 250 பக்கங்கள் குற்ற பத்திரிகை தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கேட்ட கேள்விக்கு..
250 பக்கம் கொடுத்தாலும் 2500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்று காகிதம் தான்.. அனைத்திந்திய அண்ணா திமுக கட்சியில் குடும்ப அரசியல் என்பது இல்லை.. 2026 இல் அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது.. எடப்பாடியார் தான் முதலமைச்சர் என பேட்டி அளித்தார்.
இந்த நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட கழக பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் ஆர் .டி. மூர்த்தி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் மணிகண்டன், செந்தில் வேல், தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரயில் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவ மண்டல தலைவர் தியாகராஜன் .. இணை செயலாளர் செல். சரவணன், மாவட்ட செயலாளர் சின்ராஜ் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

















