மதுரையில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 315-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் மணிமண்டபத்தில் வந்து வழிபாடு நடத்துவதற்கு வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. ஒரு வழி பாதையை இருவழிச் சாலையாக மாற்றி தர அரசு உடனடியாக நடக்க வேண்டும். பல அமைச்சர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என எல்லோரும் வருகின்றனர். ஒருவர் கூட தெரியவில்லையா இவ்வளவு இடையூறு இருக்கு என்பது , சாலையை விரிவு படித்தி இருவழிச் சாலையாக மாற்றித் தர வேண்டும்.
வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்ந்த அரண்மனை சிதிலமடைந்த காணப்படுகிறது. அதனை உடனடியாக அரசு புதுப்பித்து சீரமைத்து தர வேண்டும். வீரன் அழகுமுத்துக்கோன் அவரது ஆறு தளபதிகள் மற்றும் 248 வீரர்களை பீரங்கி குண்டுகளை வைத்து தகர்த்த இடத்தில் அழகுமுத்துக்கோன் வீரப் புகழ் போற்றும் நினைவிடம் அமைக்க வேண்டும்.
அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களை அரசு கவுரவ படுத்த வேண்டும். இதனை அரசு செய்ய தவறினால் நாளை நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்கும் போது, உடனடியாக நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தருகிறோம் என்றார். மதுரையில் நேற்று சீமான் தலைமையில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்தது குறித்து கேட்டதற்கு வயிற்றெரிச்சல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.