எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் அருகே விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர் .
காவேரி டெல்டா வேளாண் தட்பவெப்ப மண்டலத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் நெல் பயிர் சார்ந்த வேளாண் சூழலியல், தழைச்சத்து (நைட்ரஜன்) சமநிலை மேலாண்மை மற்றும் பண்பாட்டு திறன் மேம்பாடு தொடர்பான திட்டத்தின் கீழ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் சூழலியல் பாதுகாப்பிற்கான நிதியகம் காலநிலை மாற்றத்திற்கேற்ற சீரான வேளாண்மை தொடர்பான அமைப்பு இணைந்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நீடாமங்கலம் வட்டம் நகர் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்வில் அமெரிக்க சூழலியல் பாதுகாப்பிற்கான நிதியகம் அமைப்பு சார்பில் முதுநிலை விஞ்ஞானி ஆலிஸ்சன் ஜாய் ஈகிள் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதய பாணு பிரகாஷ் வாடியை கிராம மக்கள் எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகளானாலும் அவர் நடித்த விவசாயி படத்தின் பாடலை பாடி ஆரத்தி எடுத்து வரவேற்றனர் சூழலியல் பாதுகாப்பு நிதியக மாநில மேலாளர் (மகாராஷ்டிரா) சமீர் அஹ்மத் மிஸ்ரா,மாநில மேலாளர் (பீஹார்) அஜித்சிங்,ஆலோசகர் ( (பீஹார் ) குமார் அபினவ் . எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதல்நிலை விஞ்ஞானி கோபிநாத், முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார், இணை விஞ்ஞானி பாலசுப்பிரமணியன். கள ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், முருகன், சிலம்பரசன், சுஜிதா கலந்து கொண்டனர். காவேரி டெல்டாவில் மூன்று போக நெல் சாகுபடி (குறுவை, சம்பா, தாளடி) தொடர்பான சவால்கள் மற்றும் தீர்வுகள். தழைச்சத்து (நைட்ரஜன்) மேலாண்மை, உர அளவை குறைத்து, சூழலியல் பாதிப்பை குறைத்து, மகசூலை அதிகரிக்கும் முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. நீடித்த வேளாண்மை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற நடைமுறைகள். இந்நிகழ்வில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இது போன்ற கலந்துரையாடல்கள் காவேரி டெல்டாவின் நெல் உற்பத்தியை சூழலியல் ரீதியாக நிலையானதாக்க உதவும் முயற்சியின் ஒரு பகுதியாகும். விவசாயிகளுக்கு பயனுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் உற்பத்தி செலவு குறைப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன.
