பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும், வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாகவும் கூறி பள்ளி ஆசிரியை ரூ.72 லட்சம் மோசடி: காவல்துறை உயர் அதிகாரி வரை புகார் அளித்தும் மோசடி நபருக்கு ஆதரவாக இருந்துவரும் காவல்துறையினரின் செயலால் மனம்முடைந்த பாதிக்கப்பட்ட நபர் எலிபேஸ்ட் மருந்தை சாப்பிட்ட நிலையில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி…
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில் உள்ள இலுப்பூர் கிராமத்தில் ஜாக்குலின்ரோஸ் என்பவர் வீடுகட்டிவருகிறார். ஜாக்குலின்ரோஸ் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
   மேற்படி ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் தான் கட்டிவரும் புதிய வீட்டில் வெல்டிங் வேலைக்காக சோழவேந்தனை அணுகியுள்ளார்.  இதன் மூலம் அறிமுகமான சோழவேந்தனிடம் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் சோழவேந்தனிடம் தனது வீட்டின் கட்டுமான பணிக்காக பணம் கேட்டுள்ளார்.  மேலும் நான் வங்கி ஒன்றில் லோன் கேட்டுள்ளதாகவும் அதுவந்தவுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். இதன்பேரில் சோழவேந்தன் முதல் தவணையாக கடந்த 28.12.23 அன்று ஆசிரியர் ஜாக்குலின்ரோஸின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் போட்டுள்ளார்.   மேலும் சோழவேந்தனின் குடும்ப சூழ்நிலையினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் என்னிடம் கொடுக்கும் பணத்தை நான் கம்பெனிகளில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி பல தேதிகளில் பல தடவைகளாக நேரிடையாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ,40,60,000 பெற்றுள்ளார். 
   இதுதவிர ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ்  போர்ச்சுக்கல் நாட்டில் தனது உறவினர்கள், தெரிந்த நண்பர்கள் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறி சோழவேந்தனிடம் ஆட்களை அழைத்துவர கூறியுள்ளார்.  இதன்பேரில் சோழவேந்தன் தனக்கு தெரிந்த நண்பர்களிடம்  ஒரு இலட்சம், .இரண்டரை லட்சம் என 14 பேர்களிடம் பெற்ற மொத்த தொகையான ரூ.31 லட்சத்தை ஆசிரியர் ஜாக்குலின்ரோஸின் வங்கி கணக்கிலும், அவரிடம் நேரிடையாகவும் கெர்டுத்துள்ளார்.   
   ஆனால் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ்  சோழவேந்தனிடம் பெற்ற ரூ.40,60,000த்தை திருப்பி கொடுக்காமலும், வெளிநாட்டிற்க்கு அனுப்புவதாக பெற்ற பணத்திற்கு சம்மந்தப்பட்டவர்களை வெளிநாட்டிற்க அனுப்பாமலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சோழவேந்தனை ஏமாற்றியுள்ளார்.  மேலும் வெளிநாட்டில் வேலைக்காக பணம்கொடுத்தவர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் சோழவேந்தனை அடிக்கடி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
   இந்நிலையில் சோழவேந்தன் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸிடம் பணத்தை திருப்பிகேட்டுள்ளார்.  ஆனால் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ்  இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என ஓராண்டுக்கு மேலாக காலம் கடத்திவந்துள்ளார்.  மேலும் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ்  செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த சோழவேந்தன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்துள்ளார்.  ஆனால் காவல்துறையினர் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் மோசடி ஆசாமி ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ்க்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.  மேலும் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சோழவேந்தன் காவல்துறை டிஐஜி அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.  அவர்களும் சரிவர நடவடிக்கை எடுக்காத நிலையில் அவரது மனைவி, குழந்தைகளிடம் பணத்தை ஏமாந்ததை எடுத்துக்கூறி, காவல் துறையினரும் எந்தவித விசாரணையம் மேற்கொள்ளாமல் இருந்துவருவதை கூறிய சோழவேந்தன் புலம்பிய வண்ணம் கடந்த சில நாட்களாக இருந்துவந்துள்ளார்.
இத்தகைய சூழலில் சோழவேந்தன் தான் ஏமாற்றப்பட்டதையும், தன்னிடம் வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்தவர்களுக்கு நான் பணத்தை திருப்பிதரமுடியவில்லை இதற்கெல்லாம் காரணம் ஆசிரியர் ஜாக்குலின்ரோஸ் எனவும், இதுகுறித்து ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் மோசடி நபருக்கு ஆதரவாக காவல்துறை இருப்பதாகவும், தன்னை மன்னித்துவிடுங்கள் என தனது குடும்பத்தாரிடமும், பணம் கொடுத்த தனது நண்பர்களிடம் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்ட சோழவேந்தன், தனது கையில் இருந்த எலிபேஸ்ட் மருந்தை தண்ணீரில் ஊற்றி அதனை கலக்கி குடித்த வீடியோவினை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
   இந்நிலையில் சோழவேந்தன் தனது வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் ஏற்கனவே மோசடி நபரால் ரூ.72 லட்சத்தை இழந்து  மனஉளைச்சலால் புலம்பிகொண்டு இருந்ததை அறிந்த அவரது மனைவி தனது கணவன் ஆபத்தான நிலையினை அறிந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.  மேலும் சோழவேந்தனின் செல்போனை அவரது மகன் பார்த்தபோது தனது தந்தை எலிபேஸ்ட் மருந்தை சாப்பிட்ட காட்சியும், தனது நிலையை எடுத்துரைத்து பேசிய காட்சியும் சோழவேந்தனே தானாக தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது தெரியவந்தது.  இத்தகைய வீடியோ காட்சி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
			















