தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
கண்காட்சி காண வந்த அரசு பள்ளி மாணவர்கள். வினோத படைப்புகளை பார்த்து ரசித்த பெற்றோர்கள்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை காட்சிப்படுத்தினர். அதிலும் இரண்டாம் வகுப்பு, மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தென்னை, பனை, வாழை, மரங்களால் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் அறிவில் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர், அதிலும் பனை மரத்தினால் குடில் அமைத்து மூலிகைகள் கல் பானம், பனை ஓலையால் அழகு சாதன பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் குடிசை அமைத்து ஆட்சி படுத்திருந்தனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் பழங்கால பிரமிடுகள் குறித்து சிறிய கற்கள் மற்றும் மணல்களால் அமைத்து அதனைப் பற்றி பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது உள்ள கால சூழ்நிலைகளில் பல்வேறு வியாதிகள் பரவி வரும் நிலையில் மாணவர்களே தயாரித்து மூலிகை பானங்கள் ஆரோக்கிய உணவுகள் சார்ந்த அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தது. மேலும் மயிலாடுதுறை தனியார் ஆப்டிகல் சார்பாக பார்வையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை,மற்றும் தனியார் சமுதாய கல்லூரியில் பார்வையாளருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தனர்.மாணவர்கள் படைப்புகளை பார்வையிட்டு பெற்றோர்கள் வாழ்த்தி சென்றனர் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர் தங்களுக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்ததாக கூறினார்கள்.
