மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆடல் பாடல் கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டியில் காவல்துறையினர் ஆர்வமுடன் பங்கேற்றது அனைவரையும் உற்சாகப்படுத்தியது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு துறைகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறையின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற காவல்துறையினர் மண்பானையில் பொங்கல் பொங்கி படையலிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். மூன்று அணிகளாக பாட்டுக்கு பாட்டு போட்டியில் காவல்துறையினர் பங்கேற்று போட்டி போட்டுக் கொண்டு பாடல் பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இரு பாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கோலப்போட்டி, பாட்டுப்போட்டி நடன போட்டிகளில் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போக்கும் வகையில் பங்கேற்று பாட்டு பாடி நடனமாடி விழா கலை கட்டியது. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் ஏடிஎஸ்பிக்கள் ஜெயக்குமார், சுரேஷ், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், முதல் காவலர்கள் வரை பங்கேற்று மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். போட்டிகளை மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் நடத்தி போட்டிகளிலும் பங்கேற்றனர்.

















