காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் ஊராட்சி காளிங்கராயன்ஓடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடம் வேண்டுமென்று மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் இன்று புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அனைத்து தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார் அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் நவாஸ், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் இமயநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version