உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தங்க மோதிரம் அணிவித்தார்.

திமுக இளைஞரணி செயலாளரும் , தமிழ் நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இன்று 27.11.25. பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடை பெற்றது. இந்த விழாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார். அப்போது ஒரு குழந்தைக்கு உதயநிதி என அமைச்சர் நாசர் பெயர் சூட்டினார்.இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர இளைஞரணி செயலாளர் பவளவண்ணன், முன்னாள் சேர்மன் பொன்.பாண்டியன்,தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version