இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்

தமிழ் நாடு கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 2124 பயனாளிகளுக்கு 23.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவிகள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், டிராக்டர்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் சா.மு.நாசர் கூட்டுறவு இயக்கம் இந்திய துணைக் கண்டத்தில் 1904ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் கிராமத்தில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் முதன்முதலாக துவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1911ஆம் ஆண்டில் நகர மக்களின் மேம்பாட்டிற்காக திருவள்ளூரில் நகர கூட்டுறவு வங்கி துவக்கப்பட்டது.20 ஆயிரத்து 430 பயனாளிகளுக்கு .100.09 கோடி மதிப்பீட்டில் நகைக்கடன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு கள நிறுவனங்களில் மகளிரின் துயர் துடைக்கும் வகையில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு 1289 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 13703 பயனாளிகளுக்கு ரூ.30.91 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை இந்தியாவில் சிறந்து விளங்கும் ஒரே மாநிலமாக திகழ காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் என்றார்.அதனால் தான் விவசாயிகளின் வாழ்க்கையில் அக்கரை கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.30.12 கோடி மதிப்பீட்டில் 195 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திட திருவள்ளூர் மாவட்டத்தில் 12 தாலுக்கா அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத் திட்டம் மற்றும் 14 ஒன்றிய அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.கூட்டுறவு துறைக்கு உயிர் ஊட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.அவர் 5 வது முறையாக முதல்வராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து கூடுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த 7 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதவியேற்றதும் 12 ஆயிரம் கோடி நகை கடன்களை தள்ளு படி செய்தார், 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத கூட்டுறவு கடன் தள்ளுபடிகளை செய்த முதல்வர்கள் கலைஞரும், மு.க.ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே என்றார். இந்த விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தபா.ஜெயஸ்ரீ, திருவள்ளுர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version