நாதல்படுகை கிராமத்தில் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற முடியாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர்கள்:- ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 22ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக கிராமவாசிகள் அறிவிப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது நாதல்படுகை கிராமம். சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை மண் சாலையாக உள்ள இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தர அரசு முன்வந்து, அதற்கான சாலை பணியை தொடங்க ரூ.4.50 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகளின் எல்லைகளை நில அளவையர்கள் அளவீடு செய்து கொடுத்த பின்னரும், சாலையின் இருபுறங்களிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தனிநபர்கள் அகற்றாததால் கடந்த ஆறு மாதங்களாக சாலை பணியை தொடர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நாதலபடுகை கிராம மக்கள் ஐந்து முறைக்கு மேல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த கிராமவாசிகள் 25க்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். சாலை ஓரங்களில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாதல்படுகை கிராமவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டி: ராஜேந்திரன் கிராம தலைவர், நாதல்படுகை
















