தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சம் .
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீராலத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் மடப்புரம் , கீரலாத்தூர் , திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 50க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர் . இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரைகள் தெரிப்பு விட்டு இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது . தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடம் முழுவதும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் மாணவ மாணவியர்கள் உட்கார்ந்து படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது பள்ளி கட்டிடத்தின் உள்புறம் மழை தண்ணீர் கசிவால் ஈரமாக காணப்படுவதால் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது பள்ளி வகுப்பறை வராண்டாவில் செயல்பட்டு வருகிறது இதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும்.கோரிக்கை மனு அளித்தும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் பள்ளியின் வாசலில் காத்து இருக்கின்றனர் .எனவே இந்த பள்ளியின் நிலையை அறிந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பேட்டி
1, மணிகண்டன்
2 , தேவதாஸ்
