மயிலாடுதுறையில் புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சாலை மறியல்

மயிலாடுதுறையில் புறவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பல்லவராயன் பேட்டை கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு:-

மயிலாடுதுறையில் மொழையூர் முதல் திருவிழந்தூர் பொட்டவெளி வரை புறவழிச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டை கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மொழையூர், மேல நாகக்குடி லட்சுமிபுரம் வல்லாளகரம் வேப்பங்குளம், கழுகாணி முட்டம் அப்பங்குளம் பல்லவராயன் பேட்டை திருவிளந்தூர் பொட்டவெளி கிராமங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாய நிலங்களுக்கு
2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நிலங்களில் இருந்த தென்னை, தேக்கு போன்ற மரங்களுக்கு தனித்தனியாக இழப்பீடு வழங்க வேண்டும், அகற்றப்பட்ட மோட்டார் பம்பு செட்டுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Exit mobile version