CPCL நில எடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம்: தமிழக புதுச்சேரி எல்லையில் 3 மணி நேரமாக நடைபெறும் போராட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள், குத்தகை சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை 5 லட்சம் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் நிதியை ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் முறையாக மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி
புதுச்சேரி தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாகப்பட்டினம் சிதம்பரம் நாகப்பட்டினம் கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது. தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வரவைக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே கணக்கு எடுக்கப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் தொகையை உடனே தமிழக அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
