பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் அருகே 100 ஆண்காலமாக சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தினால் முத்துப்பேட்டை சாலை போக்குவரத்து பாதிப்பு .

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் அடுத்த காந்தாரி எனும் கிராமம். கிராமத்தில் ஏழை எளிய பட்டியல் இனத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . கிராமத்தில் பல்வேறு அடிப்படை அத்தியாவசிய வசதிகள் இல்லாத போதிலும், அதனையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் இக்கிராம மக்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் கடந்த நூறாண்டுகளுக்கு மேல் அரசிடம் வலியுறுத்தி வருவது இறந்தவர்களின் உடலை சிரமம் இன்றி மயானத்திற்கு கொண்டு செல்ல அப்பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிதரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைதான். கிராமமக்களின் இத்தகைய கோரிக்கையினை அதிகாரிகள் செவிமடுத்து கேட்க முன்வருவதில்லை. இருந்தபோதிலும் காந்தாரி கிராம மக்கள் தங்களது கோரிக்கையை அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளிடம் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும்போது முன்வைத்து வருகின்றனர் . அரசியல் வாதிகளும் நிறைவேற்றி தரப்படும் என்ற ஆறுதல் வார்த்தையினை இக்கிராம மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அறுவடை செய்து செல்கிறார்களே தவிர சுடுகாட்டிற்கான பாதை வசதியினை இதுவரை ஏற்படுத்தி தர எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்லும் நிலையில் காந்தாரி கிராமத்தினர் இறந்தவரது உடலை ஆற்றின் அக்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி உடலை எடுத்துசென்று வருகின்றனர் . மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல ஏதுவாக பாலம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை இதுவரையிலும் நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி காந்தாரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மன்னார்குடி முத்துப்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . தகவல் வந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார ஊராட்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது .

Exit mobile version