திருப்போரூர் அருகே ஆலத்தூர் SIDCO Pharmaceutical Complex-ல் அமைந்துள்ள குளோபல் ஃபார்மா என்ற கண் சம்பந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், கண் சொட்டு மருந்துகள் மற்றும் களிம்புகள் போன்ற பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. மேலும் ஆலத்தூர்
குளோபல் பார்மா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் வேஸ்ட் உற்பத்தி கழிவுகளை சட்டவிரோதமாக அதே ஆலத்தூர் கிராமத்தில் காயலாங்கடை நடத்தி வரும் பாண்டியன் என்பவர் அந்த மாத்திரை கழிவு பொருட்களை எடுத்துச் சென்று அதனைத் தரம் பிரித்துக் கொண்டு தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு தேவையில்லாததை கழிவு பொருட்களை ஆலத்தூர் மற்றும் தண்டலம் ஆலத்தூர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டு உள்ளார்கள் இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
மேலும் கிராம மக்கள் பலமுறை எச்சரித்தும் கூட வாடிக்கையாக குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகின்றது மேலும் விஷயம் பொதுமக்கள் தெரிந்தவுடன் இரவோடு இரவாக மருந்து கழிவுகளை தீ வைத்து எரித்து ஆதாரங்களை மூடி மறைத்து உள்ளார்கள் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து ஆலந்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
R .ராஜேஷ் என்பவர் பேட்டியளித்தார்
அப்போது பேசிய அவர்
திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் தொழிற்சாலையில் குளோபல் ஃபார்மா என்ற மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் தேவையில்லாத கழிவுகளை அருகில் உள்ள காயலாங்கடை நடத்தி வரும் பாண்டியன் என்பவருக்கு குத்தகை மூலம் எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுகின்றனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் மாத்திரை கழுவு கலந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் இறந்து உள்ளதாக கூறப்படுகின்றது இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய விசாரணை செய்து கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இல்லையென்றால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
