மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது
நெல்லில் உள்ள ஈரப்பதத்தை ஆய்வு செய்ததில் 14.8% இருந்ததாகவும் , மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லுக்கான ஊக்கத்தொகை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை , ஆனால் திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நெல்லின் ஈரப்பதத்தை முன்கூட்டியே வாங்கிக் கொள்வோம் என தெரிவித்து இருந்ததாகவும் , வெள்ளி நேர பதத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உயர்த்தும்படி தெரிவித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பின்னர் அதற்கு குறிப்புகளை சமர்ப்பித்து பின்னரே நெல்லின் பிறப்பதம் எப்போதும் உயர்த்தப்படும் என பதில் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கடந்த வருடங்களில் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி அவர்கள் ஆய்வு செய்து 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் , அதேபோன்று இந்த வருடமும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதற்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தான் எனவும் , பழைய முறைப்படி அரிசியுடன் செரிவூட்டப்பட்ட அரிசி கலந்தால் இந்த பிரச்சனை வராது எனவும் கூறினர் . இதன் காரணமாக ஒன்பது லட்சத்தி 75 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் தற்போது தேங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆகஸ்ட் மாதமே அனுமதி கடிதம் வந்து விட்டதாக கூறுகிறார். ஆனால் கடிதம் வரவில்லை என்றும் இதை முன்கூட்டியே செய்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது என கூறினார்.
800 மூட்டையில் இருந்து 1000 மூட்டைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தற்போது திமுக ஆட்சியில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை வாங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் மேலும் ஐந்து மெகா நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் எனவும் , மதுரை மாவட்டத்தில் நேரடி நெற்கள் முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் 41 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக தற்போது 8 செயல்பாட்டில் உள்ளதாக பதிலளித்தார். தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு வெளிமாநில நெல் கொண்டுவரப்படுவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 2000 மூட்டை கொள்முதல் செய்து இருந்தால் தேக்கமடைந்து இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார் என்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு 2000 முதல் 5000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்து கொண்டு இருப்பதாகவும் , அதை நேரில் சென்று பார்த்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் முனைவர் ஏ.அண்ணாதுரை , மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


















