எம்ஜிஆர் பயன்படுத்திய அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார்
எம்ஜிஆர் நடை உடை தோரணையில் வேட்புமனு தாக்கல்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலக்கல்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுத்தவரை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பழைய அம்பாசிடர் காரில் எம்ஜிஆர் நடை உடை தோரணையில் வந்த நபர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவரிடம் பேசுகையில் திருவள்ளூர் அருகே பூண்டி சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் என்றும் எம்ஜிஆர் வளர்ப்பு தொண்டன், தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுக்கு பிறகு வழக்கறிஞராகவும், எம்ஜிஆர் மக்கள் கட்சி நடத்தி வருகிறேன். சட்டமன்ற தேர்தலில் திருத்தணி, ஆவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறேன். எம்ஜிஆர் கொள்கைகள் செயல்படுத்தாததால் தான் அதிமுகவிற்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்தார்.
