மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி:-
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மயிலாடுதுறை புறநகர் பகுதிகளான வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோகுலம் நகர் ராசி நகர் கைலாஷ் நகர் கோகுலம் நகர தெற்கு, மதுரா நகர் தெற்கு, ஜெய் கணேஷ் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் முக்கிய வாய்க்காலான சேந்தங்குடி வாய்க்கால் வழியே தண்ணீர் வடிய முடியாமல் கடந்த ஐந்து நாட்களாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் சேந்தங்குடி வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் மழை நீருடன் தற்பொழுது பாதாள சாக்கடை கழிவுநீரும் தேங்கி கருமையான நிறத்துடன் துர்நாற்றம் வீசுகின்றது. வீடுகளை கடந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதி என்பதால் இதன் அருகிலேயே மயிலாடுதுறை நகராட்சியின் குப்பை கொட்டும் கிடங்கு உள்ள நிலையில் வாய்க்கால் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட விஷக்க காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலவிதமான தோல் நோய்கள் மற்றும் மழை சார்ந்த காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். சேந்தங்குடி வாய்க்காலை தூர்வாரி மழைநீரை வடிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மழை நீரை வடிய வைப்பதுடன் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைட் :-
1.செந்தில்
- விஜய் – குடியிருப்பு வாசிகள்
