February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ரேணுகாம்பாள் திருக்கோயில் – படவேடு

by Satheesa
October 20, 2025
in Bakthi
A A
0
ரேணுகாம்பாள் திருக்கோயில் – படவேடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்பா, விஷ்ணு சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர்.

எனவே அம்பிகையை வழிப்பட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் முக்கியமான தலமாக அமைந்துள்ளது.

ரேணுகா தேவி இறைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடிந்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக்கொண்டு வரும் படி கூற, அவ்வாறே தலையை பரசுராமர் கொண்டு வந்தார். இருப்பினும், பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார்.

தன் தாயை உயிர்பித்து கொடுக்கும்படி கேட்டார். முனிவர் கமண்டல நிரை மந்திரம் ஓதி தந்தார். அதைப்பெற்றுக்கொண்டு வெட்டுப்பட்டுக்கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார்.

இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக்கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள்.

அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சந்தித்தாள். பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்பு சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.

பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமதக்னி முனிவரை உயிரத்தெழ செய்கிறார். ஆன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்குவதோடு உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சொர்க்கத்திற்கு சென்றது.

இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டும் பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும்.

ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்ணே திருநீராக தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேஷமானது. தூனாக தோன்றியாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும் இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்திலிருந்து அவர் யாகம் செய்த. இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவரும் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. வயிற்றுவலி ஆகியவை குணமடையும் குழந்தைவரம் கிடைக்கவும்.

இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இவ்வாறு அருந்திய சில தினங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும் மூர்த்திகள் அருபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், கதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.

மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அனனை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிப்பட்ட பலன் உண்டு. பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம் அதோடு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருளிபுரிந்து வருகிறாள்.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்~ண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும், ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல
பெற்றதும் இத்திருத்தலத்தில்தான் தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.

ஜமதக்னி முனவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம்
என்று இத்தலத்திற்கு பெயர்;. ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இ;ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.
பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலியீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.

கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். ஆழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது
இங்கு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியுவுடன் நேர்த்திக்கடனாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம் உருவ வகையறா மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள்.

வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக்கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல் மொட்டை அடித்தல் காதுகுத்தல் தொட்டில் கட்டுதல் ஆடு மழாட கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேரத்திகடன்களாகும. முகத்தில் உள்ள மருக்கள் பருக்கள் ஆகிய நிங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள்.

குழந்தை வரம் வேண்டுவோம் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிருக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக்கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்திற்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிகபட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கிவிடுகிறது.

தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமணவரம் குழுந்தைவரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.

ஏந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிப்பட்டால் அம்மனின் அருளால் உடயன குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். குறிப்பாக கண்நோய் கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

ஆடிமாதம் 7 வெள்ளிக்கிழமைகளும் இத்தலத்தில் விஷேமாக இருக்கும். இந்த நாட்களின் போது 10 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் வந்து அம்மனை வழிப்பட்டு செல்கின்றனர். புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு தமிழ்வருடப்பிறப்பு. மார்கழி பூஜை தைமாதம் ஆகிய மாதங்கள் விஷேமானதாகும்.

Tags: aanmigamamman templepadaveduRenukampal TempletamilnaduTemple History
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாகிஸ்தானுக்கு தூங்க முடியாத இரவுகளை தந்தோம் – தீபாவளியில் மோடி பெருமிதம்

Next Post

உச்சமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Related Posts

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய தைப்பூச விழா 
Bakthi

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய தைப்பூச விழா 

February 2, 2026
மயிலாடுதுறை மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசதரிசனம்
Bakthi

மயிலாடுதுறை மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசதரிசனம்

February 2, 2026
திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் தைபூசபங்குனி உத்திர ஆழித்தேரோட்டம்
Bakthi

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் தைபூசபங்குனி உத்திர ஆழித்தேரோட்டம்

February 2, 2026
திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்
Bakthi

திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்

February 2, 2026
Next Post
உச்சமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

உச்சமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.