ரயில்வே மேம்பாலம் என்று சொல்லக்கூடிய சாரங்கபாணி நினைவு மேம்பாலம் மறுசீரமைப்பு பணி

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இது மிகவும் பழமையான பாலமாகும். இப்பாலத்தின் வாகன ஓடுத்தள பகுதியான பாலத்தின் மேற்பகுதியினை சீரமைப்பு செய்திட போக்குவரத்தினை வேறுசாலையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

எனவே, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் வாகனங்கள் அனைத்தும் மூவலூரில் இருந்து இணைப்பு சாலை (மாப்படுகை -கடலங்குடி சாலை) வழியாக கல்லணை காவேரிப்பட்டிணம் சாலையை அடைந்து மாப்படுகை வழியாக மயிலாடுதுறை வருவதற்கும், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கல்லணை காவேரிப்பட்டிணம் சாலை வழியாக அஞ்சாறுவார்த்தலையில் இருந்து இணைப்பு சாலை (குத்தாலம் பந்தநல்லூர் சாலை) வழியாக குத்தாலம் சென்று கும்பகோணம் -சீர்காழி சாலையை அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பாலப் பராமரிப்பு பணிக்காக மூன்று மாத காலங்கள் போக்குவரத்தினை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் 03.10.2025 முதல் நடைமுறைபடுத்த உள்ளது.

Exit mobile version