கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஊரம்பு மற்றும் கேரளா எல்லை பகுதிகளான பழைய கடை, புத்தன் கடை, காஞ்சிரங்குளம் , குறுவாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்து செம்பல்லி ரகமீன் வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் திடீரென வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் கேரள எல்லையில் உள்ள காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவனை, நெய்யாற்றின் கரை அரசு மருத்துவ மனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் உணவு சாப்பிட்டதாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த தகவலுக்காக எல்லையோர பொதுமக்கள் காத்து இருக்கின்றனர்.. 40 க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















