சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் !

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக் கோரி தமிழக காவல் தலைமை நிலையத்தில் டிஜிபிக்கு புகார் மனு அளித்துள்ளார்.

பட்டாலி மக்கள் கட்சியில், ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உள்நடப்புக் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் கட்சித் துறவுகள், நிர்வாகிகள் நியமனங்கள் ஆகியவற்றில் இருந்து நீக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவரது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் முகநூல் கணக்குகள், அன்புமணி ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டு, கணக்குகளின் ரகசிய குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது இல்லத்தில் யாரோ ஒருவர் லண்டனிலிருந்து அதிக விலைக்கு வாங்கிய ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்துள்ளதாகவும் அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஹேக் செய்தவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் டிஜிபியிடம் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version