முறையான பணி செய் யாத காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட லாம் என காங்கிரஸ் மாவட்ட மேற்பார்வையா ளர் ராமச்சந்திர குந்தி யா தகவல்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவ தும் காங்கிரஸ் கட்சியை வலுப் படுத்தும் வகையிலும், காங் கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட தலை வர்களை நியமிக்கவும் சங்க தன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் துவக்கப்பட்டு நாடு முழுவ தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மா நிலத்திற்கும் பார்வையாள ர்கள் நியமிக்கப்பட்டு சங்க தன் ஸ்ரீஜன் அபியான் திட் டம் தீவிரமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கி ரஸ் கட்சியின்வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கான சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாலை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம் கே பி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிதலைவர் டெல்லி பாபு தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வடசென் னை பார்வையாளராக நியமிக்கப் பட்ட ஒடிசாவை ச் சேர்ந்த ராமச் சந்திரா குந்தியா இக்கூட்டத்தி ல் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார்.
புதிதாக வடசென்னை மேற் கு மாவட்டத்திற்கு போட்டி யிடும் நபர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய் து மேலிட பொறுப்பாளரி டம் தனித்தனியாக ஒப் படைத்தனர். அவர்களிடம் தற்போதைய வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரின் செயல் பாடுகள் மற்றும் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து மேலிட பொறுப்பாளர்கள் கேட்டறிந்தனர்
நிகழ்ச்சியில் மேலிட பொ றுப்பாளர் ராமச்சந்திரா குந்தியா பேசியதாவது
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவத ற்காக சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டத்தை செய ல்படுத்தி வருகிறோம். தற் போது இங்கு பார்வையாள ராக வருவதற்க்கு முன்பாக 4 மாநிலத்தில் இந்த பணி யை முடித்துவிட்டு தற்போ து தமிழகத்தில் வடசென் னை பகுதியில் இந்த பணி யை துவக்கியுள்ளோம்.
மேலும் தற்போது இருக்கும் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் புதி யதாக யாரேனும் மாவட்ட தலைவராக விரும்புகிறீர் களா அவர்கள் வெளிப் படையாக தங்களது கருத் துக்களை தெரிவியுங்கள்
இதற்கான பிரத்யேக படி வம் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிவத் தை தேவையான ஆவண ங்களுடன் ஆங்கிலத் தில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட விண்ணப் பங்கள் மூலமாக தகுதி யான நபர்கள் தேர்வு செய் யப்பட உள்ளனர்.
பீகார் தேர்தலின் போது நடைபெற்ற எஸ்ஐஆர் மூலம் நடைபெற்ற மோசடி குறித்து எங்கள் தலைவர் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டார்.
அவருடைய வழி யில் நாங்கள் எஸ்ஐஆரை முழுமையாக எதிர்க்கி றோம் என அவர் தெரிவி த்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலை வர் முருகன் மாநில செய லாளர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் சர்க்கிள் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான காலந்து கொண்டனர்
