திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட சுற்றுச்சூழல்துறை, புவிகாப்பு அறக்கட்டளை, ஈஷோயோக மையம் ஆகியவற்றின் சார்பில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மயிலாடுதுறை அருகே திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புவிகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஈரண்யன் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில். மாவட்ட சுற்றுச்சூழல்துறை அலுவலர்கள் காமராஜ், ஆகாஷ் ஆகியோர் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகாகனி, நாவல் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை மாணவர்களுடன் இணைந்து 100 மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் மாணவர்களுக்கு 400 மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரபு நன்றி கூறினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களின் தேவைகள் குறித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்..

Exit mobile version