திருவாரூரில் பள்ளியை சூழ்ந்த மழை நீர் – மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் வடியாததால் மாணவர்கள் அவதி

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் நடந்தவாறே மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். குறிப்பாக பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு இரண்டடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக தண்ணீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version