மணல்மேடு அரசு கலை & அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி மூலம்2கோடியே20லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மழைநீர் ஒழுகும் காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இடப்பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் 2 கூடிய 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆறு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் திறக்கப்பட்டு 13 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையில் கட்டிடத்தின் சுவர்கள் மழையில் ஒழுகும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டிய காரணத்தால், இரண்டு வாரங்கள் கூட கட்டிடம் தாக்கு பிடிக்க முடியாமல் மழை நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக கட்டிடம் பலமிழந்து சில ஆண்டுகளில் இடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர், மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மழைநீர் கல்லூரி புதிய கட்டிடத்துக்குள் சேர்ந்துள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version