தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் விளைநிலங்களுக்குள் சூழ்ந்த மழை நீரால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது விளைநிலங்களில் இருந்து தண்ணீர் வடியத்தொடங்கியுள்ளது. தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொறையார், திருக்கடையூர், செம்பனார்கோவில், தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழையின்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது இதனால் மீண்டும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
















