தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தம் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் ஆவணி பெருந் திருவிழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணிப் பெருந்திரு விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இரவில் உற்சவர் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர்
ஆவணி பெருந்திரு விழாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி திருத்தேரோட்டம். 16 ஆம் தேதி தேதி கொடியிறக்கம் விடையாற்றி அபிஷேகம், அக்டோபர் 5 ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ந் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.
















