மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மற்றும் மணல்மேடு பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். மனம் பந்தலில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் மணல்மேடு செறுதியூர், குளிச்சாறு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், கலந்து கொண்டு ஆய்வு செய்தார். தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான உத்தரவு ஆணைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் சுகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் மணல்மேடு பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் மணல்மேட்டில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கண்மணி அறிவு வடிவழகன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், தனி வட்டாட்சியர் விஜயராணி, கண்காணிப்பில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அழித்தனர். தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சரியான ஆவணங்களைப் பெற்று விசாரணை செய்து மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
