குத்தாலம் அருகே தேரழிந்தோர் பகுதியில் மராமத்து என்ற பெயரில் பழைய கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலையூர் ஊராட்சியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு எண்ணெய் கிணறு பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த எண்ணெய் கிணற்றில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் புதுப்பிக்கும் பணிகளை துவங்கியுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேரழந்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் மேலையூர் பகுதியில் உள்ள தளவாட பொருட்களை அகற்றி பணியாளர்களுடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் . பின்னர் தகவல் அறிந்து வந்த குத்தாலம் வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பணிகளை தடுத்து நிறுத்தி தலவாடபொருட்களை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறிய போது இதே பகுதியில் கடந்த மாதம் பொன்னாடை அமைப்பு என்ற பெயரில் மீண்டும் வேலைகள் துவங்கப்பட்டதாகவும் , அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு நிலையில் தற்போது மீண்டும் 13 நாட்களாக பணிகளை துவங்கி இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அப்பகுதியில் உள்ள தளவாடப் பொருட்களைப் அகற்ற வேண்டும் எனவும் , இதற்குப் பிறகு நிரந்தரமாக எண்ணெய் கிணறுகளை மூட மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தளவாட பொருட்களை அகற்றாமல் பணிகளை மீண்டும் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பிரதான சாலையில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
