சகோதரத்துவம் சமத்துவம் மனிதநேயம் இவைகளை இஸ்லாம் போதிக்கிறது அதன் வழியில் சமூக செயல்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் நூற்று கணக்கானவருக்கு அறுசுவை அசைவ உணவு இலவசமாக வழங்கி வரும் உயர்ந்த உள்ளம்., முன்னுதாரணமாக திகழும் இஸ்லாமியர்.
இஸ்லாமியர் பொதுமக்களுக்கு கமகமக்கும் புலாவும் சிக்கன் கிரேவி முட்டை என அறுசுவை உணவு பொட்டலம் வழங்கல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆயப்பாடி பகுதியில் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் இவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து பல்வேறு சேவைகளை நாள்தோறும் செய்து வருகிறார் இந்நிலையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து தங்கள் வீடுகளில் அசைவ உணவு அருந்துவது வழக்கம் இந்நிலையில் ஒரு இஸ்லாமிய மற்றும் சமூக செயல்பாட்டாளர் என்ற முறையில் தங்கள் வீடுகளில் மட்டும் அசைவம் அமைப்பு சாப்பிடுவது மட்டுமின்றி மற்றவர்களும் குறிப்பாக ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை முடித்த பிறகு பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ உணவை வழங்கி வருகின்றனர் தொடர்ந்து இந்த சேவையை செய்து வருகின்றனர் இன்றும் வெள்ளிக்கிழமை யொட்டி ஆயப்பாடி திருக்களாச்சேரி பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு ஆயப்பாடி முஜ்ஜிப்பு ரகுமான் தனது நண்பர்களுடன் தனது இல்லத்தில் சமைக்கப்பட்ட கமகமக்கும் புலாவு சோறு மற்றும் சிக்கன் கிரேவி முட்டை உள்ளிட்ட அறுசுவை உணவு அடங்கிய பொட்டலம் வழங்கப்பட்டது இந்த அசைவ அறுசுவை உணவை பலரும் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர் எத்தனையோ வசதி படைத்தவர்கள் இருக்கும் நிலையில் ஆயப்பாடி முஜ்ஜிப்பு ரகுமான் தனது நண்பருடன் சேர்ந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு தொழுகைக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆதரவற்றோர் ஏழை மக்களுக்கு இந்த அறுசுவை அசைவ உணவை வழங்கி வருகிறார் இவரின் சேவைக்கு பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
