சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் சென்னை கார் வியாபாரிகள் சங்க தலைவர் இரா முரளி அவர்கள் திட்டவட்டம்
கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது
இந்த விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர் விக்ரமராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்த விழாவானது சங்கத்தின் தலைவர் முரளி . மற்றும் செயலாளர் நவீன் குமார். பொருளாளர் சுரேஷ் செயல் தலைவர் நாகூர் மீரான் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் கலந்துகொண்ட வியாபாரி சங்க தலைவர் விக்ரம ராஜா கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுகள் கார் வியாபாரத்தில் தலையிட அனுமதிக்க முடியாது என்றும் அதை அனுமதிக்காமல் அரசிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தருவதாகவும் அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை மீறியும் உள்ளே வந்தால் சென்னை கார் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாகவும்
கார் வியாபாரிகளை பாதிக்கும் விதத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான செயல்பாடுகளில் கார் விற்பனையாளர் சங்கங்கள் செயல்படும் என்றும் அதற்கு வியாபாரி சங்கங்களோடு இணைந்து செயல்படுவோம் என்றும் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இரா முரளி அவர்கள் உறுதி அளித்தார்
அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் கார் வியாபாரத்திற்குள் வந்தால் அதனால் கார் வியாபாரிகள் பாதிப்படைந்தால் கார் வியாபாரிகள் ஒன்றிணைந்து மாபெரும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவும் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்ட நிலையில் கார் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சங்க நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்பட்டன

















