நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ; நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம்.
படக்காட்சிகள் ; ஆர்பாட்டம், கோஷம்.
பேட்டி ;
- விஜயராகவன்
- சகுந்தலா. கிராமவாசிகள்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் கிராமத்தில் Wellspun என்ற தனியார் நிறுவனம் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது. நான்கு வழி சாலை பணிகளுக்காக அந்த நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பரமநல்லூர் பகுதியில் வாய்க்கால்களை துத்து, நிலத்தை சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Wellspun தனியார் நிறுவனம் அனுமதி பெறாமல் வாய்க்கால்களை துத்து குவாரி பணிகளை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். பதாகைகளை கையில் ஏந்தியபடி 300க்கும் மேற்பட்ட பகுதிமக்கள் பங்கேற்ற ஆர்பாட்டத்தில், பெண்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர். குவாரி அமைந்தால் நீர்வளம் பாதிப்பதுடன், கடும் வறட்சி ஏற்பட்டு கால்நடைகள் தண்ணீருக்காக தவிக்கும் அபாய நிலை ஏற்படும் என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


















