சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்கவும் ஈமக்கிரியை தொகை ரூ.25,000 வழங்கவும் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ஈமக்கிரியை தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசி, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
