ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் இணைந்து அடிப்படை ஊதியம் உயர்வு வழங்குதல்,
பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் நேரடி வங்கி கணக்கில் அரசு பணியாளர்களுக்கு விடுவிப்பது போல் விடுவித்தல், பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும், பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும், பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் படைக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி நான்காவது நாளாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆனது அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மாதர்சி தலைமையிலும் சுந்தரி முன்னிலையிலும் 400க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்
















