திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தில் பணியாற்றும் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், தொழிலாளர் விரோதப் போக்கு போன்ற பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டலம் சார்பில் மண்டலதுணை மேலாளராக இருக்கும் ஏ.சீனிவாசனின் தொழிலாளர் விரோத போக்கினையும், நிர்வாக சீர்கேட்டினையும் மற்றும் பல்வேறு முறையற்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கினைக் கண்டித்தும் திருவள்ளூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் கண்டன் வாயிற்கூட்டம் நடைபெற்றது. துணை மண்டல மேலாளராக பணியாற்றி வரும் ஏ.சீனிவாசன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்களின் பேரில் 7 மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், பெண் வன்கொடுமை போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு பல தொழிலாளர்களை பழிவாங்குவதாகவும், இது குறித்து தமிழக அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை குற்றச்சாட்டுகளால் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சீனிவாசனை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தவறினால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
