சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள் சட்ட விதிமுறைகளை மீறி வாடகை பயன்பாட்டிற்கு விடுவதால் முறையான வரிகட்டி வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சட்ட விரோதமான இந்த நடவடிக்கைகளை மோட்டார் வாகன அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை. சட்டவிரோதமாக வாகனங்கள் இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க கோரியும், மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, உரிமைகுரல் ஓட்டுநர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுனர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
