டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தினர் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டித்வா புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30000/- நிவாரணம் வழங்கிட வேண்டும் , பாதிக்கப்பட்ட சாகுபடி விலை நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் செயலி முறையில் கணக்கெடுப்பதை தவிர்த்து பழைய முறையிலேயே கணக்கீடு செய்திட வேண்டும் , பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் 100 நாள் வேலை திட்டம் மகாத்மா காந்தி பெயரிலே இருக்க வேண்டும் , மாநில அரசு பல்வேறு நிதிநெருக்கடி உள்ள நிலையில் 100 நாளுக்கான ஊதியம் மாநிலத்தின் பங்கு 40% இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Exit mobile version