கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்காததை கண்டித்தும், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஜிபிஆர்எஸ் மூலம் கணக்கெடுப்பதை கைவிட வலியுறுத்தியும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத மசோதாக்களை கைவிட வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சட்ட நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பை விவசாயிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பருவம் தவறி மழை பெய்தது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன இந்த பயிர்களுக்கு நிவாரணமாக 63 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது 11 மாதங்களை கடந்தும் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மத்திய அரசு விதைகள் குறித்த மசோதாக்கள் தாக்கல் செய்வதை கண்டித்தும் இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்திந்திய விவசாயிகள் சங்கம்,டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் தஞ்சை காவேரி ஒருங்கிணைப்பு குழு வீரசோழன் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர் மேலும் டிட்வா புயல் நிவாரணத்திற்கு ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கணக்கெடுப்பு செய்வதை கைவிட வலியுறுத்தியும் மின்சாரத்தை தனியார் மையமாக்கி முன் கூட்டியே பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தின் இறுதியில் சட்ட நகல் அடங்கிய துண்டு பிரசுரத்தை விவசாயிகள் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை நடைபெறுகின்ற விவசாயி நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
















