மயிலாடுதுறை மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2025-2026-ஆம் பருவத்துக்கு உயர்த்தப்பட்ட ஆதார விலையுடன் கொள்முதல் தொடக்கம்:-
மணக்குடி கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் உயர்த்தப்பட்ட புதிய விலையில் நடைபெறும் கொள்முதலை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் காரீப் கொள்முதல் பருவம் கே.எம்.எஸ். 2025-2026-ஆம் பருவத்துக்கு உயர்த்தப்பட்ட ஆதார விலையுடன் கொள்முதல் (செப்.1) இன்றுமுதல் தொடங்கியது. உயர்த்தப்பட்ட விலை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, நெல் சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545-ம், (அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,389, ஊக்கக்தொகை ரூ.156) பொது ரகம் குவிண்டால் ஒன்றிக்கு ரூ.2500-ம், (அரசின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2369, ஊக்கக்தொகை ரூ.131) வழங்கப்படுகிறது. இந்நிலையில், மணக்குடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உயர்த்தப்பட்ட புதிய விலையில் நடைபெறும் கொள்முதலை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்) மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
